ஸ்ரீஇராமகிருஷ்ணா பொறியியல்கல்லூரியில் பொங்கல்
![]()
ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்
தைத் திருநாளை சிறப்பிக்கும் வண்ணம் பொங்கல் விழா
வள்ளி கும்மி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தைத் திருநாளை சிறப்பிக்கும் வண்ணம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தியும், வள்ளி கும்மி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.
கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் மற்றும் நுண்கலை கலை மன்றம், ஆசிரியர் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், மாணவர் சங்கம் இணைந்து தைத் திருநாளை சிறப்பிக்கும் வண்ணம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ. சௌந்தர்ராஜன் தலைமை ஏற்று விழாவினை தொடங்கி வைத்தார். இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் புதுப்பானையில் சமத்துவப் பொங்கல் வைத்து, அதனை இறைவனுக்கு படைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
தொடந்து மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கிராமத்து மற்றும் ஏலம் கூவி விற்கலாம் வாங்க என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பல பரிசுகளை வென்றனர். மேலும் ஆசிரியர்களுக்கு உரியடித்தல், கயிறு இழுத்தல், பால் பாசிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் கல்லூரியின் தமிழ் மன்றத்தினர் நமது தமிழர் பாரம்பரியக் கலைகளான வள்ளி கும்மி ஆட்டம், பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மற்றும் பல்வேறு நடன செயல்திறன்களை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

