திமுகதுடியலூர்மேற்குபகுதியில்திராவிடப்பொங்கல்
![]()
கோவை
திமுக துடியலூர் மேற்கு பகுதியில் திராவிடப் பொங்கல் விழா
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன
கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தி மு க துடியலூர் மேற்கு பகுதி சார்பில் திராவிடப் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் அமைச்சர் வி செந்தில்பாலாஜி ஆலோசனையின்படி, மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர்ரவி, தொகுதி பொறுப்பாளர் மூலனூர் கார்த்தி ஆகியோரின் ஆதரவுடன், துடியலூர் மேற்கு பகுதியில், “திராவிட பொங்கல் விழா” நடத்தப்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோலப்போட்டிகள், தடகள போட்டி, சைக்கிள் போட்டி, கிரிக்கெட் போட்டி, லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர், லக்கி கார்னர் உள்ளிட்ட பலவேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திரளானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பகுதி கழக பொறுப்பாளர் ப இராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட விவசாய அணிஅமைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர் இரா.கற்பகம், வட்டக் கழகச் செயலாளர் ஈஸ்வரன், பகுதி கழக நிர்வாகிகள் ராக்கிமுத்து, கோவைசம்பத், பழனிச்சாமி, வட்ட கழக நிர்வாகிகள் சம்பத்குமார், வெங்கடேஷ், சேது, உதயகுமார், ராஜேஸ்வரி, சின்னு, ஜெயக்குமார், நவீன், கார்த்தி, கணகு, சாம்ராஜ், செல்வி, பூங்கொடி, சாந்தி, அனுஷா, சுலோச்சனா, கிருஷ்ணவேணி, மாதேஸ்வாமி, பிரகாஷ், சுரேஷ், சங்கீதபிரியா, பிரியா, சத்யா, இந்துமதி, விஜயா, அனிதா, முருகேஷ், நவநீதகிருஷ்ணன், ஹரி, சிவதர்ஷன், அபுதாகிர், அபிநயா, ஜெய்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

