ஏவிஎஸ் கலை & அறிவியல் கல்லூரி பொங்கல் விழா

Loading

ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி “பொங்கல் விழா” கொண்டாட்டம்!
ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் “பொங்கல் விழா” மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் திரு.கைலாசம் ஐயா அவர்கள் தலைமை வகித்தார். செயலர் திரு.கை.இராஜவிநாயகம் அவர்கள், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி.ஐ.கார்மல் மெர்சி பிரியா அவர்கள், ஏவிஎஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி.எம். பிரபா அவர்கள் மற்றும் துணை முதல்வர்கள் ஆகியோர் தலைமையில் விழா இனிதே துவங்கியது.
மாணவிகள் பலவித வண்ணங்களில் கோலம் இட்டு கல்லூரி வளாகத்தை அலங்கரித்து இருந்தனர். மாணவ மாணவியர் அனைவரும் பம்பரம், கில்லி தாண்டல், முறியடித்தல், முறுக்கு கடித்தல்,சாக்குப் போட்டி, சோடா பாட்டில் நீர் சேகரித்தல், ஐந்தாங்கல், பல்லாங்குழி போன்ற நாட்டுப்புற விளையாட்டுகளும் கும்மியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற நடனங்களையும் ஆடி மகிழ்ந்தனர். ஈரோட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட தாரைத் தப்பட்டை உடன் கூடிய நடனம் பூக்காவடி போன்ற நடனங்கள் கோலாகலமாக இருந்தது. விழாவின் மையமாக புது பானையில் புத்தரிசியிட்டு பால் பொங்க மாணவர்களின் பொங்கலோ பொங்கலென்னும் குலவை சத்தத்துடன் பொங்கல் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. பூஜையின் போது மாணவர்கள் முளைப்பாரி சீர்வரிசை தட்டுடன் வைத்து மகிழ்ந்தனர். பலத்துறை மாணவர்களும் அவர்கள் வளர்க்கும் காளை மாடுகளை அவற்றை அழைத்து வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாணவ மாணவியர் அனைவருக்கும் பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டன.
கிராமப்புறத் தின்பண்டக் கடைகளும் பிரியாணி குஸ்கா போன்ற நவநாகரிக உணவுப் பொருட்களின் கடைகளும் வைக்கப்பட்டிருந்தன. அனைத்துத் துறை மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் டிஜே என்னும் இசை நிகழ்வும் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உடைகளான வேட்டியில் மாணவர்களும் பட்டு சேலையில் மாணவிகளும் வந்திருந்து கண்ணை கவரும் வகையில் இருந்தனர். பாரம்பரிய விளையாட்டுக்கள் நடனங்கள் இசை நிகழ்ச்சிகள் என அமைந்து கல்லூரி வளாகமே விழா கோலம் பூண்டு அனைவர் மனதிலும் மகிழ்ச்சி எனும் புது வெள்ளத்தை அள்ளி தெளித்ததாக இதில் அமைந்திருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
0Shares