உப்பிலிபாளையம் இந்திர பகவானுக்கு அபிஷேகம்
![]()
கோவை
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள இந்திர பகவானுக்கு, போகி பன்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை உப்பிலிபாளையம் பகுதியில்,
அருள் மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உள்ள இத்திருக்கோவில் வளாகத்தில் இந்திர கடவுள் சிலை நிறுவபட்டு தினமும் பல்வேறு வழிபாடுகள் நடத்த பட்டு வருகின்றது. இந்த நிலையில் பொங்கல் பன்டிகைக்கு முன் தினம், போகி பன்டிகையை முன்னிட்டு இந்திர பகவானுக்கு பல்வேறு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்திரனின் மறு பெயர் போகி என வரலாற்று சுவடுகளின் கூற்றுக்களிலிருந்து அறியப்பட்டுள்ள நிலையில், போகி பன்டிகையை கொண்டாடும் வேளையில் இந்திர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக இந்திர பகவானுக்கு, இளநீர் அபிசேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், தயிர் அபிஷேகம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்த பட்டு, சிறப்பு அலங்காரத்தில் இந்திரன் காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன், தலைமை தாங்கினார். அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான புஸ்பாணந்தம், முன்னிலை வகித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுந்தர்ராஜ், வளரும் தமிழகம் கட்சியின் மண்டல தலைவர் சந்திரன், ஊர் தர்மகர்த்தா பழனிசாமி, ஆசிரியர் திருமூர்த்தி, ஜெயச்சந்திர ராஜன், கதிர்வேல், திருப்பதி, நாகராஜ், தங்க வேலு, அசோகன், இருகூர் செந்தில் ராஜ், மாணிக்கமல்லர், ஆசிரியர் ஆறுமுகம், சண்முகம், டாஸ்மாக் மணிமாறன், முன்னாள் கவுன்சிலர் செந்தில், ஆசிரியர் ஆறுமுகம், நஞ்சுண்டாபுரம் மோகன்ராஜ், அசோகன், நித்யானந்தன், பட்டக்காரர் பிரபுகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

