புத்தகம் வாசிப்பு மனதை செம்மையாக்கும்

Loading

புத்தகம் வாசிப்பு மனதை செம்மையாக்கும்
பந்தலூர் முழுநேர கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பந்தலூர் முழுநேர கிளை நூலக நூலகர் நித்தியகல்யாணி தலைமை தாங்கினார்.
பள்ளி ஆசிரியர்கள் செலின், வெண்ணிலா, தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் 
பந்தலூர் முழுநேர நூலகத்தின் நூலகர் அறிவழகன் பேசும்போது நூலகத்தில் உறுப்பினராவது மூலம் பல புத்தகங்களை தேடி படித்து வாழ்வில் உயரலாம். ஒரு அடையாள அட்டையில் ஒரு புத்தகம் எடுத்து சென்று 15 நாட்கள் படித்து மீண்டும் கொண்டுவந்து ஒப்படைக்கலாம். அரசு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன வருங்கால கல்விக்கு இந்த நூலகம் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது தேசிய இளையோர் தினத்தில் விவேகானந்தர் கொள்கையை பின்பற்றி மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினராக சேர்வது வரவேற்கத்தக்கது. நூலகத்தில் அரசு மூலம் அறிவியல், இலக்கியம், கவிதை, கட்டுரை என்பன பல்வேறு வகையான தலைப்புகளை சேர்ந்த புத்தகங்கள் உள்ளன. தினசரி செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசிக்கும் போது நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும், போட்டி நிறைந்த உலகில் திறன்களை வளர்த்துகொள்ளவும், மனதை செம்மையாக்கவும், சிந்திக்கும் திறன் அதிகரிக்கவும் கல்வியில் மேம்படவும் உதவும். புத்தக வாசிப்பு இளைய தலைமுறையை தவறான பாதையில் இருந்து மீட்கும் என்றார்.
நிகழ்ச்சியில் கூடலூர் லார்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் எச் எப் ஐ ஜி ஐ திட்டம் சார்பில் மாணவர்களுக்கான நூலக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் செலுத்தி 15 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை  வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நூலக பணியாளர்கள் அம்பிகா, சரஸ்வதி மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares