ஸ்ரீராமகிருஷ்ணாபாலிடெக்னிக் பொங்கல் விழா
![]()
கோவை,
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில்
பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில்,
அம்மி அரைத்து, கயிறு இழுத்து, பானை உடைத்து அசத்திய மாணவ மாணவிகள்.
கோவை துடியலூர் அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்து மாணவிகளுக்கு அம்மி அரைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தியும், பறை இசைத்தும் நடனமாடி கொண்டாடினர்.
கோவை துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர். வண்ண கோலங்களால் அழகூட்டப்பட்ட மண் பானையில் பச்சரிசி இட்டு புத்தம் புதிய மண் அடுப்பில் விறகு வைத்து தீ மூட்டி பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று கூறி இறைவனுக்கு படையலிட்டனர். தொடர்ந்து பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து மாட்டுப்பொங்கலையும் கொண்டாடினர்.
பின்னர் விழாவையொட்டி அம்மி அரைத்தல், உரிஅடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன இப்போட்டிகளில்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மாணவ,மாணவியர் பரை இசைத்தும், நடனம் ஆடி உற்சாகமுடன் கலந்துகொண்டனர். பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சக்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டது
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கட்டிடவியல் துறைத்தலைவர் நிவேதிதா செய்திருந்தார்.

