வாக்குச்சாவடி உதவி மையங்களை நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ராமன் குமார் நகராட்சி,வாக்குச்சாவடி மையங்களில் உள்ள உதவி மையங்களை நேரில் ஆய்வு :
திருவள்ளூர் ஜன 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான ராமன் குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தேர்தல்  அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொன்னேரி நகராட்சி அலுவலகத்திலும்,  மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், மெதூர் ஊராட்சி காவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,  திருப்பாளைவனம் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும்  ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான ராமன் குமார் தலைமையில் மாவட்ட தேர்தல்  அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் முன்னிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளின் விபரங்களை கேட்டறிந்தார்.
மேலும், ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஆவடி காமராஜ் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான ராமன் குமார் தலைமையில் மாவட்ட தேர்தல்  அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் முன்னிலையில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், வாக்காளர் பதிவு அலுவலரும் பொன்னேரி சார்  ஆட்சியருமான ரவிகுமார்,வாக்காளர் பதிவு அலுவலரும் ஆவடி மாநகராட்சி துணை ஆணையருமான மாரிசெல்வி, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கே.எம்.தனலட்சுமி (பொன்னேரி நகராட்சி ஆணையர்), சோமசுந்தரம் (பொன்னேரி வட்டாட்சியர்), கண்ணன் (ஆவடி வட்டாட்சியர்), மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி,வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares