கோவை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
![]()
கோவை
அலென் கரியர் பயிற்சி நிறுவனம் மருத்துவ நிழைவு தேர்வான நீட் மற்றும் பொறியியல் துறை தேர்வான ஜே.இ.இ.உள்ளிட்ட முதன்மை தேர்வுகளை மாணவர்கள் எதிர் கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறது..
குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளான ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆலன் கோயம்புத்தூர் ஒரு சிறந்த வழிகாட்டுதல் தளத்தை வழங்கி வருகிறது…
இந்நிலையில் அலென் கோவை கிளை சார்பாக தனது வருடாந்திர ஆண்டு விழாவான சோபன் எனும் மாணவர்களுக்கான பாராட்டு விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…
பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக சாதித்து முன்னணி தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற கோயம்புத்தூரின் சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவாக நடைபெற்றது.

