ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50ஆண்டு விழா

Loading

கோவை
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின், 50 ஆண்டு பொன்விழா  நிகழ்ச்சிகள் 
வரும், 15-ல்  கொடிசியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்  பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார்
கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி  கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை, கோவையில் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  குறைந்த செலவில் தரமான மருத்துவம் எனும் சீரிய நோக்கத்தோடு துவங்க பட்டு இன்றளவும்  இயங்கி வருகின்றது
இந்த நிலையில் இதன் 50ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இதனை விழாவாக கொண்டாடும் வகையில், கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்த வளாகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில்
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares