ஈரோட்டில் திமுக சார்பில் மகளிருக்கான திருவிழா

Loading

ஈரோடு
ஈரோட்டில் திமுக சார்பில் மகளிருக்கான திருவிழா என்ற தலைப்பில் தமிழர் திருநாள் விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சர் முத்துசாமி பரிசுகளை வழங்கினார்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் திமுக சார்பில் மகளிருக்கான திருவிழா என்ற தலைப்பில் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விழாவில் ரங்கோலி, புள்ளி கோலம், காய்கறிகளைக் கொண்டு உருவங்களை வடிவமைத்தல் மற்றும் மெஹந்தி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மகளிருக்காக நடத்தப்பட்டன. இதில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளை நடுவர்கள் நேரில் பார்வையிட்டு மதிப்பெண்கள் வழங்கியதன் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மகளிருக்கு குக்கர், கிரைண்டர் மற்றும் ரொக்கத் தொகை உள்ளிட்ட பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் எம்.பி., ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.
0Shares