அருள்மிகு கரபுரநாத சுவாமிமகா கும்பாபிஷேகம்

Loading

சேலம்
சேலம் உத்தமசோழபுரம் இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த அருள்மிகு கரபுரநாத சுவாமி திருக்கோயில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வருகின்ற தை மாதம் 25ஆம் நாள் 8 :2 :2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்மிகு பெரியநாயகி உடனமர் அருள்மிகு கரபுரநாத சுவாமி மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், ராஜகோபுரமும் ஏக காலத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. தை மாதம் 21 ஆம் நாள் 4:2:2026 முதல் தை மாதம் 26 ஆம் நாள் 9.2.2026 வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதுசமயம் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி ,பூலாவரி, புத்தூர் ஊர் பொதுமக்கள் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இதில் அறங்காவலர் குழு தலைவர் சாந்தி வீரபாண்டி ராஜா, அரங்காவலர்கள் துரைசாமி, சின்னு , அன்பு, சாமிவேல் ,செயல் அலுவலர் சோழமாதேவி மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு தெரிவித்தனர்.
0Shares