821மாணவர்களுக்கு மடிக்கணினி நாசர் வழங்கினார்

Loading

திருத்தணியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 821 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 07 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வினை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கலைக் கல்லூரியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி- 85,திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி (பாராமெடிக்கல்) -28,திருத்தணி ஸ்ரீசுப்ரமணியசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி- 708 ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 821 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரசு கலை கல்லூரி வளாகத்தில், முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மொத்தம் 4,319 மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் கல்வி, தொழில் நுட்ப அறிவு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை எளிதாக பெற தமிழ்நாடு அரசு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது.
இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),சு.சுதர்சனம் (மாதவரம்),டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநரும் திட்ட இயக்குநருமான வை.ஜெயகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.எஸ்.யுவராஜ், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன் கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0Shares