ஆதியோகி ரத யாத்திரை ஈஷா மஹா சிவராத்திரி

Loading

ஈரோடு, ஜன. 7
ஈரோட்டிற்கு வரும் 15-ம் தேதி வருகை தரும் ஆதியோகி ரத யாத்திரை: ஈஷா மஹாசிவராத்திரி முன்னெடுப்பு
ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை, சிரவை மற்றும் பேரூர் ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ கொங்கு மண்டலப் பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பேசிய பேரவை நிர்வாகிகள், கோவைக்கு வர இயலாத பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசிக்கவும், மஹாசிவராத்திரி விழாவிற்கு அழைப்பு விடுக்கவும் இந்த யாத்திரை நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 17-ம் தேதி கோவையில் தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை, பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகப் பயணித்து இன்று (ஜன. 6) ராசிபுரத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல், திருச்செங்கோடு, கரூர், கொடுமுடி மற்றும் காங்கேயம் வழியாகப் பயணித்து, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஈரோடு மாநகரை வந்தடைகிறது. பின்னர் ஜனவரி 17-ல் பெருந்துறைக்கும், 18-ல் சத்தியமங்கலத்திற்கும் ரதம் செல்ல உள்ளது.
தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்கள், இரண்டு மாத காலத்தில் சுமார் 30,000 கி.மீ தொலைவு பயணிக்க உள்ளன. வரும் பிப்ரவரி 15-ம் தேதி கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா, ஈரோடு மகேஸ்வரி மஹால் உட்பட தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. ரத யாத்திரை வரும் இடங்களில் பொதுமக்கள் மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை சமர்ப்பித்து ஆதியோகியை வழிபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0Shares