கணவாய்காடு பெருமாம்பட்டி ஸ்ரீகாளியம்மன்திருவிழா
![]()
கணவாய்காடு பெருமாம்பட்டி பஞ்சாயத்து ஸ்ரீகாளியம்மன் கோவில் திருவிழா!
சேலம் மேற்கு மாவட்டம் கணவாய்காடு பெருமாள்பட்டி பஞ்சாயத்து காளியம்மன் கோயில் பண்டிகையொட்டி தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மறுநாள் பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் ,அழகு குத்துதல், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மஹாதீபாராதனையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஸ்ரீகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..

