புதுச்சேரி உப்பளம் நகராட்சி பூங்கா மறுசீரமைப்பு
![]()
புதுச்சேரி ஜன-6
புதுச்சேரி, உப்பளம் தொகுதி நகராட்சி பூங்காவை மறு சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை எம்எல்ஏ அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கோலாஸ் நகரில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவை மறு சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. 2023–24 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10,53,470 மதிப்பீட்டில், புதுச்சேரி நகராட்சி மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளுக்கான பூமி பூஜையை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மூன்று மாத காலக்கெடுவில் நடைபாதை அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பூங்கா முழுமையான மேம்படுத்துதல், கழிவறை வசதி ஏற்படுத்துதல் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த ஏற்ற மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில பிரதிநிதி கணேசன், கிளை செயலாளர்கள் கோமுகி, கோபி, ராகேஷ், மகளீர் அணி நிர்வாகி வைத்திஸ்வரி, உப்பளம் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், திமுக நிர்வாகிகள் சந்திரா, ராஜி, பஸ்கல், மோரிஸ், ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பூங்கா மறு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், அந்தப் பகுதி பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடத்த ஏற்ற இடமாக உருவாகும் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

