இளைஞர் நீதிக் குழுமம அலுவலக கட்டிடம் திறப்பு

Loading

ஈரோடு மாவட்டம்
மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி எஸ்.சமீனா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச. கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இளைஞர் நீதிக் குழுமம அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (05.01.2026) மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி எஸ். சமீனா, அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருச.கந்தசாமி இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் இளைஞர் நீதிக் குழும அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்கள்.

இளைஞர் நீதிச்சட்டம் 2015 மற்றும் அதன் விதிகள் செயல்படுத்துவதன் மூலம் 18 வயதிற்குட்பட்ட சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளை விசாரித்து, பாதுகாப்பு அளித்து. சீர்திருத்தி, மறு வாழ்வு அளிப்பதே இக்குழுமமத்தின் நோக்கமாகும். குழந்தைகளின் நலனை முன் நிறுத்தி சட்ட உதவி, ஆவோசனை, சமூக ஒருங்கிணைப்பு போன்றவற்றை உறுதி செய்து இளைஞர் நீதிக் குழுமம் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்ட இளைஞர் நீதிக் குழும அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நீதிக் குழுமம் செயல்பட ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடத்தை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திருமதி.அ.சுஜாதா, தலைமை நீதித்துறை நடுவர் திருமதி.கே.கிருஷ்ண பிரியா. இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் திரு.ஆர்.வாஞ்சிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.ரா.உமாமகேஸ்வரி. மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற நடுவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம். 

0Shares