மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் 06.01.2026 முதல் 09.02.2026 வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியம் வாரியாக காலை 9.30 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 06.01.2026 அன்று திருவள்ளூர் ஊ.ஒ.தொ.பள்ளி, வேப்பம்பட்டு,08.01.2026 அன்று திருத்தணி அ.பெ.மே.நி.பள்ளி, திருத்தணி, 09.01.2026 அன்று பூண்டி அ.மே.நி.பள்ளி, பூண்டி,20.01.2026 அன்று சோழவரம்,புழல் அ.ஆமே.நி.பள்ளி, சோழவரம், 22.01.2026 அன்று பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார வள மையம், பள்ளிப்பட்டு, 23.01.2026 அன்று மீஞ்சூர் அ.ஆமே.நி.பள்ளி, பொன்னேரி, 27.01.2026 எல்லாபுரம் அ.மே.நி.பள்ளி, பெரியபாளையம்,29.01.2026 அன்று வில்லிவாக்கம் ந.தொ.பள்ளி, சத்தியமூர்த்தி, 30.01.2026 கடம்பத்தூர் அ.மே.நி.பள்ளி, கடம்பத்தூர், 03.02.2026 அன்று திருவாலங்காடு அ.மே.நி.பள்ளி, திருவாலங்காடு,05.02.2026 அன்று ஆர்.கே.பேட்டை அ.பெ.மே.நி.பள்ளி, ஆர்.கே.பேட்டை, 06.02.2026 அன்று கும்மிடிப்பூண்டி அ.பெ.மே.நி.பள்ளி ,கும்மிடிபூண்டி,09.02.2026 அன்று பூவிருந்தவல்லி சரோஜினிவரதப்பன்.பெ.மே.நி.பள்ளி , பூந்தமல்லியில் நடைபெறும்.
இம்மருத்துவ மதிப்பீட்டு முகாமில் சார்ந்த ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாமில் தேசிய அடையாள அட்டை இல்லாதவருக்கு அடையாள அட்டையும் மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அதற்கான ஏற்பாடும் செய்யப்பவுள்ளது. எனவே இம்முகாமிற்கு வரும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் 4 புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

