புதுச்சேரி மணவெளியில் புதிய சமூக நலமையம்

Loading

புதுச்சேரி ஜன-6
புதுச்சேரி மணவெளி தொகுதியில் புதிய சமூக நல மையம் கட்டுவதற்கான பணிகள் சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். 
புதுச்சேரி மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் பகுதியிலுள்ள தானம்பாளையத்தில் சமூக நல மையம் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
 சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூபாய் 61 லட்சம் மதிப்பில் புதிய சமூக நல மையம் கட்டுவதற்கான அரசாணை பெற்று தந்தார்.
அதன்படி புதிய சமூகநல மையம் கட்டுவதற்கான பணிகளை துவங்கும் முகமாக இன்று 05.01.2025 நடைபெற்ற பூமி பூஜையில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு எஸ் செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலை பொறியாளர்  அகிலன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மாவட்ட தலைவர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் ஞானசேகர் கணேசன், முத்துராம் திருமால் குமரன் பல்லவரசு ஜெயக்குமார்  சக்திவேல் ராஜா கோகுல் ரமேஷ்  சகாயராஜ் சேகர் கலியபெருமாள் லட்சுமணன் குமார் அக்ரிகல் கணேஷ் கந்தவேல் பிரபாகரன் ராஜேஷ் நரேந்திரன் ஜெயக்குமார்  நாகமுத்து பழனி சுமதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares