இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ கட்டுமான கண்காட்சி
![]()
சேலம்
சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை, இன்ஜினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ கட்டுமான பொருட்கள் கண்காட்சி, இன்று தொடங்கி வரும் ஐந்தாம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் கூட்டமைப்பு மாநில தலைவர் ராமராவ் பெற்றுக் கொண்டார். இந்த கண்காட்சியில் கட்டுமான துறை சம்பந்தமான 150 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, கட்டுமானத்திற்கு தேவையான அதிநவீன கட்டுமான பொருட்கள் மற்றும் கதவு, ஜன்னல், ரெடி மிக்ஸ் கான்கிரீட், செராமிக்ஸ், மர சாமான்கள், சோலார் மின்சாதனங்கள், போன்றவை குறித்து இலவச பார்வை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இந்த இலவச அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்களை தரமானதாகவும், விலை குறைந்த வகையிலும் வாங்கி பயன்பெறுமாறு, சேலம் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் செல்வகுமார், எஞ்சினியர்ஸ் பில்ட் எக்ஸ்போ சேர்மன் ராஜு, நாகராஜ், எக்ஸ்போ பொருளாளர் செந்தில் வேலவன், ஒருங்கிணைப்பாளர் செல்வமணி, ஆகியோர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

