சாலையை சீரமைத்து தரசாலை மறியல்

Loading

வயலூர் முதல் மும்முடிக்குப்பம் வரை உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :

திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் முதல் மும்முடிக்குப்பம் வரையில் உள்ள கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 8 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையில் விபத்துக்கள் நேரிடுவதாக கூறப்படுகிறது. மேலும் வயலூர் ஊராட்சியில் 25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் குண்டு குழியுமாக மாறியதாகவும் கடந்த 8 ஆண்டுகளாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது .

இதனால் வயலூர், சூரகாபுரம், மும்முடிக்குப்பம் கிராம மக்கள் வயலூர் கூட்டுச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் சாலை மறியல் ஈடுபட முயன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போலீசாரின் எதிர்ப்பையும் மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூரகாபுரம், மும்முடி குப்பம், நெசமங்களம், கொட்டையூர் வயலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும் போது அடிக்கடி தவறி விழுந்து காயம் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாவதாகவும் எனவே உடனடியாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் சாலை அமைக்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொங்கல் பண்டிகையை  சாலையில் வைத்து கொண்டாடப் போவதாகவும் எச்சரித்தனர்.
0Shares