7 அம்சகோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

Loading

திருவள்ளூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் :
திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆன்லைன் வசதியுடன் நவீனமயமாக்கல் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர், ஒருங்கிணைப்பாளருமான த.கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.மேலும், சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் எம்.பிரபு முன்னிலை வகித்தார். அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.அகமது கபீர் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலகத்தை ஆன்லைன் உள்பட அனைத்து வசதியுடன் நவீனமயமாக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாடு நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றி அமைக்க வேண்டும். தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைப்பு அரசாணை வெளியிடுதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாநில துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் மிதுன் குப்தா, மாவட்ட செய்தி தொடர்பாளர் விஜயகாந்த், மாவட்ட பிரச்சார செயலாளர் சு.செ.நல்லீஸ்வரன்,மாவட்ட இணைச் செயலாளர் புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதில் நிறைவாக மாவட்ட பொருளாளர் பிரகாஷ் பாலாஜி நன்றி கூறினார்.
0Shares