ஸ்ரீ வெங்கடேசபெருமாள் திருக்கோவில் அபிஷேகபூஜை

Loading

 

சேலம்

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வெங்கடேச பெருமாளுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, சாமிக்கு சிறப்பு வண்ண வாசனை மலர்கள் அணிவித்து, மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டும், உற்சவருக்கு கல் அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவத்துடன் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் காலை முதல் இரவு வரை 2000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

0Shares