விளையாட்டு உபகரணம் எடுத்துசெல்லும் வாகனம்

Loading

நீலகிரி
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீர, வீராங்கனைகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு., அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வீர, வீராங்கனைகளுக்கு வழங்கி, விளையாட்டு உபகரணங்கள் எடுத்து செல்லும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளிலுள்ள 294 வார்டுகளுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் (மட்டை பந்து, கைப்பந்து, கால்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட உபகரணங்கள்) அடங்கிய 423 தொகுப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில், வீர, வீராங்கனைகளுக்கு வழங்கி,
இந்த விளையாட்டு உபகரணங்களை இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, எதிர்வரும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி, வாழ்த்தினார். அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விளையாட்டு உபகரணங்கள் எடுத்து கொண்டு செல்லும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)
மணிகண்டன், உதகை நகர்மன்ற தலைவர்  வாணீஸ்வரி, உதகை நகர்மன்ற துணை தலைவர் திரு.ரவிக்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அலுவலர் திருமதி இந்திரா, பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் தலைவர்கள், வீர, வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares