கோமாரி தடுப்பூசி முகாம் மு.பிரதாப் திறந்துவைத்தார்
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம், திருவாலங்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மருந்து பெட்டகத்தை திறந்து வைத்து தொடங்கி வைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு தாது உப்பு கலவைகளை மற்றும் தீவன விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.இதில் மாவட்ட மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சுபஸ்ரீ, திருவள்ளூர் கோட்ட உதவி இயக்குநர் தாமோதரன், திருத்தணி கோட்ட உதவி இயக்குநர் கிரிதரன் திருத்தணி கோட்டை கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

