கூடலூர் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்

Loading

கூடலூர்

கூடலூர்வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு மற்றும் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு  கண்காணிப்புக்குழு தலைவரும் வருவாய் கோட்டாட்சியருமான குணசேகரன் தலைமை தாங்கினார்.

வருவாய் கோட்டாட்சியாரின் நேர்முக உதவியாளர் சரவணக்குமார்,
கூடலூர் குடிமைபொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் நடேசன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவச வேட்டி சேலை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளில் kyc ஆதார் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்வதில் பொதுமக்களிடையே குழப்பத்தை நீக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர் விநியோக கட்டணங்கள் முறையாக வசூலிக்கவும் முறையான நேரங்களில் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உஜ்வாலா திட்டம் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி அதிக பயனாளிகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  இதுகுறித்து வருவாய் கோட்டாசியர் குணசேகரன் பதில் அளித்து பேசும் போது தற்போது 80 சதவீத ரேஷன் கார்டுகளுக்கான வேட்டி சேலை உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட கடைகளுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கியவுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வேட்டி சேலை வழங்கப்படும். செறிவூட்டப்பட்ட அரிசி குறித்தும், இலவச எரிவாயு இணைப்பு உஜ்வாலா திட்டம் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வட்ட வழங்கல் அலுவலர், எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். ரேஷன் கடைகளில் ஆதார் பதிவு பதிப்பிக்காத பட்சத்தில் அதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து வகை ரேசன் கார்டு உறுப்பினர்களும் kyc புதுப்பிக்கவேண்டியது தங்களின் கடமை என்பதை உணர்ந்து புதுப்பித்து கொள்ள வேண்டும். எரிவாயு இலவச இணைப்பு உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுவதற்கு குடும்பத்தில் உள்ளோர் ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ரூ.1,20,000 ரூபாய்க்கு உட்பட்ட வருமான சான்றிதழ், பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட எரிவாயு முகமை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் உஜ்வாலா திட்டத்தில் இணைப்பு வழங்கப்படும். எரிவாயு சிலிண்டர் முறையான விநியோகம் மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் வழங்கல் துறை பணியாளர்கள் கிருஷ்ணன், மணி கண்காணிப்பு குழு உறுப்பினர்களான ஜான் மனோகர், காளிமுத்து, அஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares