ஈரோடு மண்டல விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
![]()
ஈரோடு
ஈரோட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மண்டல விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் ஈரோடு மாவட்டம், மேற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் – 2025 இன்று ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் உற்சாகமாகத் தொடங்கியது. “காக்கும் பணி! எங்கள் பணி!” என்ற தாரக மந்திரத்துடன் நடைபெறும் இந்தப் போட்டிகள் டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.
இன்று காலை நடைபெற்ற துவக்க விழாவிற்கு, ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மண்டல துணை இயக்குநரும், கோவை மேற்கு மண்டல இணை இயக்குநருமான (மு.கூ.பொ) கல்யாணகுமார் தலைமை தாங்கிப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். ஈரோடு மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் கணேசன் நன்றியுரை வழங்கினார்.
ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தீயணைப்புத் துறை வீரர்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

