மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் மாவட்டஆட்சியர்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு, அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 100 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், ஹில்பங்க் பகுதியைச் சேர்ந்த திரு ஸ்ரீநாத் லட்சுமிகாந்த், என்பவர் டிசம்பர் 6ஆம் தேதி அன்று சைக்கிளிங் பெடரேசன் ஆப் இந்தியா (CFI) மூலம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 30வது தேசிய அளவிலான 50 கி.மீ. சீனியர் பிரிவிற்கான மிதிவண்டி போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றமைக்காக வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தினையும், நெதர்லாந்து நாட்டில் உலக அளவில் நடைபெற்ற 181 கி.மீ-க்கான மிதிவண்டி போட்டியில் கலந்து கொண்டமைக்காக வழங்கப்பட்ட பதக்கத்தினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். தற்போது இவர் தமிழ்நாடு அரசு 3 சதவீத இடஒதுக்கீட்டின் மூலமாக உதகை வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

