மாவீரன் பொல்லான் திருவுருவச்சிலைக்கு மரியாதை

Loading

ஈரோடு
மாவீரன் பொல்லான்திருவுருவச்சிலைக்கு அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (28.12.2025) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் உள்ள மாவீரன் பொல்லான் அரங்கத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் திரு.அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.சந்திரகுமார், தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திரு. திப்பம்பட்டி ஆறுசாமி, தூய்மை பணியாளர் நலவாரிய துணை தலைவர் திருமதி.கனிமொழி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அ.சுஜாதா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சிந்துஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.சுகுமார், அறச்சலூர் பேரூராட்சி தலைவர் ரா.விஜயகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திருமதி செ.கலைமாமணி உள்பட பலர் உள்ளனர்.
0Shares