கவுண்டம்பாளையம் தொகுதி தேர்தல் அலுவலகம்

Loading

கோவை
வடமதுரை எஸ் எஸ் கமலேஷ் திருமண மண்டபம் அருகே
கவுண்டம்பாளையம் தொகுதி தேர்தல் அலுவலகம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ஏற்கனவே இருந்த 4 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்களில் எஸ் ஐ ஆர் திருத்தத்தின் மூலமாக பெரும்பான்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு தற்போது 3 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள்தான் உள்ளனர் என கோவை துடியலூர் அருகே கோவை வடக்கு மாவட்ட தி மு க கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக கோவை துடியலூர் வடமதுரை எஸ் எஸ் கமலேஷ் திருமண மண்டபம் அருகே கோவை வடக்கு மாவட்ட தி மு க கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறந்துள்ளனர்.
இந்த அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்களிடம் பேசும்போது 2021 ம் ஆண்டு தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியடைந்தோம். இருந்த போதும் முதலமைச்சர் அனைத்து தொகுதிகளுக்கும் சம அளவில் வளர்ச்சித் திட்டங்களை செய்து வருகிறார்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு முதலமைச்சர் அதிக முறை வருகை புரிந்துள்ளார். மேம்பாளங்கள், நூலகம், பூங்கா என பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்து கோவையில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. ஓரிரு நாளில் ஹாக்கி மைதானம் திறக்கப்படவுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ஏற்கனவே இருந்த 4 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்களில் எஸ் ஐ ஆர் திருத்தத்தின் மூலமாக பெரும்பான்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு தற்போது 3 லட்சத்து 77 ஆயிரம் வாக்காளர்கள்தான் உள்ளனர். எனவே தகுதியான ஒரு வாக்காளரும் நீக்கப்படக்கூடாது. தகுதியில்லா வாக்காளர்கள் ஒருவர் கூட சேர்க்கக்கூடாது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி,  தொகுதி பார்வையாளர் மூலனூர் கார்த்தி உள்பட மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள், பி எல் ஏ டூ, பி டி ஏ, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சைவ, அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். பெண்கள் இருபுரங்களிலும் நின்று பூரண கும்பம் மற்றும் மலர்கள் தூவி வரவேற்றனர். மேலும் பெரியார், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடம் அணிந்து வந்திருந்த குழந்தைகள் ரோஜாப்பு கொடுத்து வரவேற்றனர்.
0Shares