திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சிபணிகள் ஆய்வு

Loading

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து பணிகள் விரைவாக முடிக்க வேண்டும், பணிகள் நடைபெறுவதை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள்  (26.12.2025) அன்றுதிமிரி ஊராட்சி ஒன்றியம்  அகரம் ஊராட்சியில் கலவை மடுவு ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி திட்டத்தில் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை பார்வையிட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.  பணிகள் காலதாமதமாக இருப்பதற்கான  காரணிகளை கேட்டறிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பென்னகர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும், முதலமைச்சரின் குழந்தை  நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதையும், PMJANMAN திட்ட வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்து பனி காலதாமத்திற்கான காரணத்தை கேட்டறிந்தார். பணியை தொடர்ந்து கண்காணித்து விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம்  கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, அருகில் இருந்த சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது குறித்து கேட்டறிந்தார். ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் இதனை பயன்பாட்டில் வைக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறுவதை பதிவேடு வைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டார்கள்.

தொடர்ந்து மாம்பாக்கம் ஊராட்சியில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வந்ததை ஆய்வு செய்து பணி காலதாமதத்தை கேட்டறிந்தார். முறையாக கண்காணித்து பணியை முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டத்தில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பழைய தொகுப்பு வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டை ஆய்வு செய்து கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதியில் கழிவுநீர் வசதி இல்லாமல் இருப்பதையும் சாலைகள் இல்லாமல் இருப்பதையும் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலரை கேட்டுக் கொண்டார்

 

இதனைத் தொடர்ந்து புதுப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையில் பல்வேறு வகையான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து கேட்டறிந்தார்கள். தொடர்ந்து இருங்கூர் ஊராட்சியில் தட்டச்சேரி பகுதியில் 36 இருளர் இன மக்களுக்கு PMJANMAN திட்டத்தில் தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பினை ஆய்வு செய்து, இப்பொகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதிகள் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள திட்ட இயக்குனர் அவர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வீடுகளை விரைவாக முடிக்கவும், வீட்டில் சமையல் மற்றும் படுக்கை அறைகளில் பொருள்கள் வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திடவும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து இவ்வூராட்சியில் ரூ.16.60 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்து காலதாமதத்தை கேட்டறிந்து அடுத்த மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மேல்நெல்லி ஊராட்சியில் மேட்டுத்தெரு பகுதியில் 8 இருளர் என மக்களுக்கு PMJANMAN திட்டத்தில் தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்து அப்பகுதியில் மழை நீர் வடிகால் வசதி,  கழிவுநீர் வசதி ஏற்படுத்திட உத்தரவிட்டார். ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக கண்காணித்து, ஒவ்வொரு பணியையும் விரைவுப்படுத்தவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களை கேட்டுக்கொண்டார்கள். தொடர்ந்து, மேல்நெல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டுமான பணியையும் ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.ந.செ.சரண்யாதேவி, செயற்பொறியாளர் திரு.செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் திருமதி.சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அன்பரசு, திருமதி.சித்ரா, வட்டாட்சியர் திரு.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

வெளியீடு- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

0Shares