வரும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் டிச 26 : திருவள்ளூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் ஆகிய வரியினங்களை எளிதாக செலுத்த ஏதுவாக ஊராட்சி அளவில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் வருகிற 27.12.2025 மற்றும் 28.12.2025 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.
மேலும், சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்யப்படும்.எனவே, இந்த சிறப்பு வரி வசூல் முகாமினை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

