அமைச்சர் சு.முத்துசாமி 6 பயனாளிகளுக்கு அரசு வீடு
![]()
ஈரோடு மாவட்டம்
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
திரு.சு.முத்துசாமி அவர்கள்
6 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டிக் கொள்ள ஆணைகளை
வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 6 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டிக் கொள்ள ஆணைகளை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (25.12.2025) வழங்கி தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவீரன் பொல்லான் அவர்களுக்கு ஜெயராமபுரத்தில், திருவுருவச்சிலையுடன் அரங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். மாவீரன் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக இருந்து பல கூடிய போர்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மாவீரன் பொல்லான் அவர்கள். அன்னாரின் புகழை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்தவர்களிடம் தற்காலிகமாக குடியிருப்பதற்கு வீடுகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவ்வாறு இடம் வழங்கிய ஆறு நபர்களுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டிக் கொள்வதற்காக ஆணைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் பொதுமக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப. மாநிலங்களவை உறுப்பினர் திரு.அந்தியூர்.ப.செல்வராஜ். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.சந்திரகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் திரு.விஜயகுமார். உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வெங்கடேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

