மனித விலங்கு மோதலை தடுக்க கட்டுப்பாட்டு மையம்

Loading

நீலகிரி
மனித விலங்கு மோதலை தடுக்கும் நோக்கில் கட்டுப்பாட்டு மையம்
தமிழ்நாடு வனத்துறை, நீலகிரி மாவட்டம்  கூடலூர் வனக்கோட்டம்,
நாடுகாணி வனசரகத்தில் உள்ள ஜீன்பூல் பூங்காவில் (20/12/2025) தேதி அன்று மனித விலங்கு மோதலை தடுக்கும் நோக்கத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை அருகில் உள்ள ஊர் பொதுமக்களுக்கும்,இதர துறைகளுக்கும் தெரிவிக்கும் நோக்கத்தில் அனைத்து வனச்சரகத்தில் உள்ள வார்டு கவுன்சிலர்களையும் வரவழைத்து கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்படும் திறன்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு வனத்துறை. கூடலூர் வனக்கோட்டம் மனித விலங்கு மோதலை தடுப்பதற்காக துவங்கப்பட்ட இலவச அழைப்பு எண் toll free (1800 425 4353)அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
0Shares