திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

Loading

திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம் : ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு :

திருவள்ளூர் டிச 26 : ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையிலும் இந்த உலகிற்கு இயேசு கிறிஸ்துவை வரவேற்பதாகவும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் திருவள்ளூர் ஜே.என். சாலையில் அமைந்துள்ள தூய புனித பிரான்சிஸ் சலேசியர் ஆலயத்தில் வண்ண விளக்குகளால் தேவாலயத்தை அலங்கரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறியவர் முதல் பெரியவர் வரை பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஒன்று கூடி தேவாலயத்தில் திருப்பலி என சொல்லக்கூடிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு வரவேற்கும் விதமாக ஒளி ஏற்றி அனைவரும் இயேசுவின் பிறப்பை வரவேற்றனர். தொடர்ந்து குழந்தை இயேசுவை அங்கு அமைக்கப்பட்டு இருந்த குடிலில் வைத்து ஜெபித்தனர்.  இதனை அங்கு கூடியிருந்த பல்வேறு மக்கள்  கண்டு மகிழ்ந்தனர்.
0Shares