ஈரோடு மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
![]()
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா: மேயர் மற்றும் ஆணையாளர் பங்கேற்பு
ஈரோடு மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் ஐஏஎஸ், முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, அனைவரும் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநகராட்சி உதவி ஆணையாளர் தனலட்சுமி, மண்டலத் தலைவர் ப.க.பழனிச்சாமி, திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் மண்டல உதவி ஆணையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

