வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு

Loading

கோவை
கோவை காரமடை அடுத்த எத்தப்பநகர் அம்பேத்கர் நகர் பகுதியில், தமிழக அரசின் சார்பாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கோவை மாவட்டம் காரமடை அடுத்த அம்பேத்கர் நகர், எத்தப்பன் நகர் பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோவை மாவட்ட
ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகராஜன், கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார் அப்பொருது அவர் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது..
ஜாதிகள்
இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என மகாகவி பாரதி அன்றே கூறி சென்று விட்டார். இதனை இன்றும் நாம் பின்பற்ற வேண்டு்ம் என்று தான் அனைத்து பள்ளி பாட புத்தகங்களிலும் முதல் பக்கத்தில் அந்த பாடலை பதிவு செய்துள்ளனர். நாம் பள்ளிக்கு சென்றதும் நாம் கற்க வேண்டிய முதல் பாடம் இது தான் என்பதை இந்த அரசு அனைத்து மாணவர்கள் மனதிலும் பதிவு செய்து வருகின்றது. இன்றைய அரசின் சலுகைகள் அனைத்தும் தாழ்த்த பட்ட மக்களுக்கு தான் வழங்கி வருகின்றது இதற்க்கு காரணம் தாழ்ந்த ஜாதி என்ற ஒரு நிலை மாறி அனைவரும் சமம் என்ற நிலைபாடுக்கு வர வேண்டும் என்று தான் அரசு முனைப்பு காட்டி செய்து வருகின்றது.. இவற்றை நீங்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார். தொடர்ந்து தாராபுரம் பகுதியை சேர்த்த அருணகிரி கச்சேரி நிகழ்ச்சியின் மூலமாக விழிப்புணர்வு பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களான, உஷா, இந்திராணி, பூர்ணிமா, புஸ்பா, சுமித்ரா,உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares