வி.எம்.நகரில்பள்ளி மாணவனை தாக்கி கடத்த முயற்சி

Loading

திருவள்ளூர் வி.எம்.நகரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவனை தாக்கி கடத்த முயற்சி : பொதுமக்கள் பிடித்து 1 மணி நேரம் கழித்து வந்த போலீசிடம் ஒப்படைத்து சரமாரியாக கேள்வி கேட்டதால் பதற்றம் :

திருவள்ளூர் டிச 24 : திருவள்ளூர்  வி.எம்.நகர் பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜெயின் பள்ளி அருகில் வசித்துவரும் ஜெய் ஆனந்தராஜா – ராசாத்தி  ஆகியோர் மகன்கள்  யோகேஷ்ராஜ்(8) கனீஷ்ராஜா(10) ஆகியோர் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் 6.45 மணியளவில் தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சிறுவர்களை அடித்தும் கையைப் பிடித்து இழுத்தும் உள்ளார்.இதனையடுத்து குழந்தைகள் அலறவே தாய் ராசாத்தி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இளைஞரை பிடித்தனர்.

திருவள்ளூர் டவுன் போலீசருக்கு புகார் கொடுத்த பிறகு அங்கு வந்த போலீசார் இளைஞர் கஞ்சா போதையில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி சிறிது தூரம் அழைத்துச் சென்று விட்டுள்ளனர். போலீஸ் அங்கிருந்த போன உடனே மீண்டும் வந்த அந்த வட மாநில இளைஞர் சிறுவன் யோகேஷ்ராஜை கன்னத்தில் அறைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது சகோதரன் கனீஷ்ராஜா அலறவே வீட்டு அருகில் இருந்த கடைகாரர் அந்த இளைஞரை பிடித்துள்ளார்.
 இதனையடுத்து மீண்டும் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீஸ் வராததால் போலீஸ் அவசர உதவி எண் 100-ல்  புகார் தெரிவித்தனர். அதனையடுத்து வந்த டவுன் போலீசார் பிடித்து வைத்திருந்த வட மாநில இளைஞரை வண்டியில் ஏற்றி புறப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரமாக பிடித்து வைத்திருந்த இளைஞரை எதுவும் விசாரிக்காமல் ஏன் அழைத்துச் செல்கிறீர்கள்.என்றும் இந்த பள்ளியிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த தெரு வழியாகத் தான் செல்ல வேண்டும். அப்படி இருக்க பிடித்து கொடுத்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரிமாரியாக  பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் மற்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்ன டவுன் போலீசார் வடமாநில இளைஞரை அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ருஷ்டம்குமார் பாண்டே என்பது தெரியவந்துள்ளது.  எதற்காக திருவள்ளூர் வந்தான். கடத்தல் கும்பலை சேர்ந்தவனா… இவனுடன் யார் யார் எல்லாம் வந்திருக்கிறார்கள்.. கத்தி செய்யவதற்காக குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருக்கும் கூட்டத்தை சேர்ந்த நபரா… அல்லது பலூன் வியாபாரம் செய்யும் கும்பலை சேர்ந்தவனா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவனை கடத்த முயன்ற தகவல் அறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
0Shares