சர்க்கரைஆலை நச்சுப்புகை மக்கள் பாதிப்பு

Loading

ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி சர்க்கரை ஆலை நச்சுப்புகை: மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு – அரசுக்கு கோரிக்கை
ஈரோடு மாவட்டம், சின்னப்புலியூரில் இயங்கி வரும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் மற்றும் நச்சுப்புகையினால் சுற்றுவட்டார கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக நிலத்தடி நீர் மாசுபட்டதோடு, தற்போது ஆலையிலிருந்து வெளியேறும் சாம்பல் துகள்கள் மற்றும் துர்நாற்றத்தினால் பொதுமக்களுக்கு நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் மற்றும் புற்றுநோய் போன்ற உயிரிழப்பு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் முறையாக இல்லை என குற்றம்சாட்டி, பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் காக்க 21.12.2025 அன்று பெரியபுலியூரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கால்நடைகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாத்திட, விதிமீறல்களைத் தடுத்து நச்சுப்புகையை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கினர்.
0Shares