அரசு பள்ளியின் கட்டமைப்பை வலுப்படுத்தவேண்டும்
![]()
கோவை
அரசு பள்ளியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள், தொழில்முனைவோர்களாக மாறி, தங்களது தயாரிப்புகளை காட்சி படுத்தி விற்பனை செய்து அசத்திய சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள,
இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து மாணவர்கள் சந்தை எனும் நிகழ்ச்சியை கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத்தி சமாஜ் திருமண அரங்கில் இன்று காட்சி படுத்தினர். யங் வேர்ல்ட் மார்க்கேட் என நடத்த பட்ட இக்கண்காட்சியானது, இளம் தொழில் முனைவோர்களுக்கான தளமாக அமைந்தது. ஒரு நாள் நடைபெற்ற இக்கண்காட்சி மற்றும் விற்பனையகத்தில் இளம் மாணவர்களின் புதிய புதிய தயாரிப்புகளை, அங்காடிகளாக உருவாக்கி காட்சி படுத்தினர். மொத்தமாக 18 அங்காடிகள் அமைய பெற்றிருந்த இக்கண்காட்சியில், மாணவர்கள் தங்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஹோம் மேட் சாக்லேட், சோப், பொம்மை வகைகள், கேக் வகைகள், விளையாட்டு அங்காடிகள், கனிப்பொறி அங்காடிகள், மற்றும் மலைவாழ் மக்களின் கை வண்ண பொருட்களான தேன், நறுமண பொருட்கள் என பல்வேறு பொருட்கள் காட்சி படுத்த பட்டதுடன் விற்பனையும் நடைபெற்றது.. இக்கண்காட்சியை தம்பு மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் பிரித்தா பிரியதர்சினி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார். மேலும் மாணவ மாணவர்கள் மத்தியில் அவர் கூறியதாவது..
மாணவர்கள் தங்களது தனித்திறன், மற்றும் குழுத்திறன்களை மேம்படுத்தி இச்சமுதாயத்தில் தங்களையும் ஒரு தொழில் முனைவோர்களாக மாற்றுவது என்பது இந்த உலகை மாற்றும் ஒரு நெம்புகோலாக நான் பார்க்கின்றேன்.. மேலும் தனது அனுபவத்தில் இத்தனை சிறிய வயதில் இத்தகைய கண்காட்சியை நடத்தி விற்பனை செய்வது வியப்பாக உள்ளது.. இதில் கலந்து கொண்ட மாணவர்களின் உழைப்பு நிச்சயம் வெற்றி அடைவதுடன், இது போன்ற செயலை அனைத்து பள்ளி மாணவர்களும் செய்து இச்சமூகத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்களும் தெரிவிக்க பட்டது..
இந்த நிகழ்ச்சியில் கோ. கிளாம் கண்காட்சியின் நிறுவனர் ஹூனா கொட்டேஜா, இன்னர் வீல் க்ளப் தலைவர் தீபிகா விஜய், ஜஸ்ட் கிட் இன் நிறுவனத்தின் நிறுவனர் சுஸ்மா புருஷோத்தம், ஆர் எஸ் புரம் லேடிஸ் க்ளப் உறுப்பினர், ஜஸ்மீத் கவுர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவர்களின் இந்த சாதனைகளை வாழ்த்தினர். மேலும் மாணவர்கள் இதன் மூலமாக கிடைக்கும் வருவாயை கொண்டு பொது, அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மேலும் சமூகத்தில் பல நல்ல திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் மாணவர் குருஜேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

