144கோரிக்கை மனுக்கள் ஆட்சியர் பெற்றுக்கொண்டார்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 144 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உதகை வட்டம், சர்ச் ஹில் ரோடு முனுசாமி காலனி பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் குடும்ப அட்டையின் நகல் வேண்டி விண்ணப்பித்திருந்ததின் அடிப்படையில் குடும்ப அட்டையின் நகலினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

