வளர்ப்பு நாய்களுக்கு விளையாட்டு பூங்கா

Loading

நீலகிரி
தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் உதகையில் பசுமை வரி செயலாக்க திட்டத்தின் கீழ் ரூ.42.30 இலட்சம் மதிப்பில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) (உதகை மரவியல் பூங்கா) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
இன்று உதகையில் பசுமை வரி செயலாக்க திட்டத்தின் கீழ் ரூ.42.30 இலட்சம் மதிப்பில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இப்பூங்காவில் பெரிய வகை நாய்கள் மற்றும் சிறிய வகை நாய்கள் பயிற்சி எடுப்பதற்கும், விளையாடுவதற்கும் தனித்தனியாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் umcpetregistration.in என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உரிமையாளர்கள் புகைப்படம், செல்லப்பிராணிகளின் புகைப்படம், முகவரி மற்றும் தடுப்பூசிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர, அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.ரமேஷ், நகராட்சி ஆணையாளர் .கணேஷ், உதகை நகர்மன்ற தலைவர்  வாணீஸ்வரி, உதகை நகர்மன்ற துணை தலைவர் திரு.ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர.ஜார்ஜ் மற்றும் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares