காங்கிரஸ் கட்சியினர்2026 தேர்தலுக்கான விருப்பமனு
![]()
காங்கிரஸ் கட்சியினர் , 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு கட்சியின் தலைமையில் கொடுத்தனர்.
உளுந்தூர்பேட்டை டிசம்பர் 23,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பின்படி, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிட கட்சியின் சார்பில் போட்டியிட
கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட நான்கு தொகுதிக்கான விருப்ப வேட்பு மனுவை எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநில துணைத்தலைவர் முனைவர்.சீனிவாசன் மற்றும் மாவட்ட துணை தலைவர் இதயத்துல்லா ஆகிய இருவரும் வேட்பு மனு அளித்தனர்,
இந்நிகழ்வில் உடன் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் வட்டாரத் தலைவர் ராதாகிருஷ்ணன், கரடிப்பாக்கம் தங்கராசு, சங்கராபுரம் வட்டார தலைவர் செல்வராஜ், வட்டாரத் தலைவர் பிரபு, விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் அய்யங்குட்டி நாராயணன், சேந்தநாடு வட்டார தலைவர் காசிநாதன், மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஆதில்கான், வட்டார துணை தலைவர் ஆம்பூர் முருகன், செயற்குழு உறுப்பினர் பேரங்கியூர் மூர்த்தி ராமன், மீடியா முருகன் மற்றும் தேசிய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு பொதுச்செயலாளர் ராம்மோகன் ஆகியோரிடம் விருப்ப மனு கொடுத்தனர்

