இளைஞர்கள்,இளம் பெண்கள்ஈர்க்கும் வகையில்கேட்வால்க்

Loading

கோவை
கோவையில் நடைபெற்ற மிஸ்டர், அன்ட் மிஸஸ் கேட்டகிரி அன்ட் குழந்தைகளுக்கான சிறப்பு கேட்வால்க் நிகழ்ச்சியில் ஒய்யார நடை நடந்து பல்வேறு பரிசுகளை தட்டி சென்ற குழந்தைகள், மெய் மறந்து ரசித்த கோவை மக்கள்!!!
ஆடை வடிவமைப்பு, மற்றும் அழகு துறைக்கு இளைஞர்கள்,  இளம் பெண்கள், மற்றும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில், ஆண்டு தோறும் சிறப்பு கேட்வால்க் நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த சில்பா சீதாராமன் நடத்தி வருகின்றார். இதன் மூன்றாவது பதிப்பாக இந்த ஆண்டுக்கான கேட்வால்க் நிகழ்ச்சி கோவை விமான நிலையம் அருகே உள்ள ஜோன் உணவகத்தில் நடைபெற்றது. இந்தியா ப்ரைட் ஐகான் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் வந்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மிஸ்டர், அன்ட் மிஸஸ் கேட்டகிரி, குழந்தைகள் சிறப்பு கேட்வால்க் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் பூனை நடை நடந்து பார்வையாளர்களை பரவசபடுத்தினர். குற்ப்பாக சுட்டி குழந்தைகளின் ஒய்யார நடை அனைவரையும், மெய் சிலிர்க்க வைத்தது..
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஷில்பா கூறியதாவது..
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாம் பயணிக்கின்றோம் இந்த ஆண்டை சிறப்பான ஆண்டாக வழியனுப்பும் நோக்கில், இந்த நிகழ்ச்சி நடத்த பட்டது என கூறியவர் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல பாதை உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றிகளை கூறுவதாக கூறினார்.. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து அழகிகள், ஆண்கள் வந்துள்ளர் ஆனால் கோவையில் இருந்து அதிகமாக யாரும் வெளி வரவில்லை, இதனை முறியடிக்க வேண்டும் என இதுமாதிரியான போட்டிகளை நடத்தி இத்துறைக்கு வரும் அனைவருக்கும் ஒரு மேடையை உருவாக்கி தருவதாக கூறினார். இங்கு அழகிகள், மற்றும் ஆணழகனை தேர்வு செய்ய, 5 வகை போட்டிகளை நடத்துவதாகவும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள், மெடல்கள் வழங்க உள்ளதாக கூறினார். இது அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறந்த அழகிகள் ஆணழகன் மற்றும் ஒய்யார நடை நடந்த குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மார்ட்டின், மற்றும் விளையாட்டு வடிவமைப்பாளர் லிண்டோ ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். போட்டியின் நடுவர்களாக, யுவராஜ், நஜீருதின், தீபக் ஆகியோர் இருந்து சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். சாய் பிரசாத் போட்டோகிராபி நிறுவனத்தினர், உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர் விரைவில் கோவையில் இருந்து மிஸ்டர் கோயம்புத்தூர், மிஸஸ் கோயம்புத்தூர் என பலரும் வருவார்கள்  என நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
0Shares