அண்ணியை கொலை செய்த மைத்துனர் கைது

Loading

திருவள்ளூர் அருகே தம்பி மனைவியுடன் சண்டை போட்ட அண்ணியை கொலை செய்த மைத்துனர் கைது :

திருவள்ளூர் டிச 23 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அடுத்த இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சாந்தி. தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வரும் இளையராஜாவின் சகோதரர் இசைமேகம் என்பவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சாந்தி மைத்துனர் இசைமேகத்தின் மனைவியை தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு இளையராஜா மனைவி சாந்திக்கும் மைத்துனர் இசைமேகத்திற்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. எனது மனைவியை எப்படி திட்டலாம் என கேட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இசைமேகம் அண்ணியை கத்தியால் குத்தினார்.
தகவலறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மைத்துனர் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்களின் மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறில் அண்ணியை மைத்துனர் குத்தி கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0Shares