ஆட்சியர்அலுவலகவளாகத்தில்பல்நோக்குகூட்டரங்கம்
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய பல்நோக்கு கூட்டரங்கம் : அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு கல்வெட்டை திறந்து வைத்தார் :
திருவள்ளூர் டிச 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய பல்நோக்கு கூட்டரங்கினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்டரங்கில் வனத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூ ர்), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (மின்சாரம்) சுஜாதா, மாவட்ட வன அலுவலர் சுப்பையா, மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் ராதை, வனச்சரக காவலர்கள், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

