ஹென்றி வூல்சியின்அமோகம் உயர்தரசைவ உணவகம்
![]()
சேலம், ஹென்றி வூல்சியின் அமோகம் – உயர்தர சைவ உணவகம் திறப்பு விழா.
சேலம்.டிச.22
சேலம், கருப்பூர் – பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹென்றி வூல்சியின் அமோகம் உயர்தர சைவ உணவகத்தின் 2வது புதிய கிளையானது, ஒமலூர் மெயின் ரோடு, போத்தீஸ் எதிர்ப்புறத்தில் புதிதாக தொடங்கப்பட்டது. மூன்று தளங்களை கொண்ட இவ் உணவகத்தின் தரைத்தளத்தினை, சேலம் மாநகராட்சியின் மேயர் இராமச்சந்திரன் அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 100 பேர் நின்று கொண்டு சாப்பிடும் வகையில், போதுமான இருக்கைகளுடன் அமைந்துள்ள
தரைத்தளம், சுயசேவை எனப்படும் Self-Service வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 35 நபர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இருக்கைகளுடன், ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள முதல் தளத்தினை, கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் ஸ்ரீநாத் – சாதனா தம்பதியினர் தொடங்கி வைத்து வாழ்த்தினர். 70 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில், குளிர்சாதன வசதியுடன் அமைந்திருக்கும் இரண்டாம் தளத்தினை, சேலம் தமிழ்செல்வி டவர்ஸின் உரிமையாளர்கள் நல்லதம்பி – தமிழ்ச்செல்வி தம்பதியினர் தொடங்கி வைத்தனர். குளிர்சாதன வசதியுடன் இயங்கும் இத்தளம் காலை 11.30 முதல் மதியம் 3.30 வரையிலும், பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 11 மணிவரை செயல்படும். சேலம் மக்களின் ஆதரவினை பெற்ற இவ்உணவகத்தில், மிகவும் தரமான சைவ உணவு வகைகளை, மக்கள் விரும்பும் சுவையில், சுகாதரமான முறையில் தயாரித்து வழங்குவதே தங்களது நோக்கம் என அமோகம் உணவகத்தின் உரிமையாளர் சதீஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
வாரத்தின் ஏழு நாட்களுக்கும் சத்தான ஏழு சிறுதானிய வகை தோசைகள், சிறுதானிய புட்டு மற்றும் கொழுக்கட்டை வகைகள்,சிறுதானிய கார, இனிப்பு பணியாரங்கள், இளைஞர்கள் விரும்பும் சைவ தந்தூரி வகைகள் என சைவ உணவுகளின் சாம்ராஜ்ஜியமாக அமோகம் அமையும் என்றார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சேலம் நகரத்தின் மையத்தில் தொடங்கப்பட்டுள்ள அமோகத்தின் இரண்டாவது கிளைக்கும், மக்கள் அனைவரும் வருகை புரிந்து, தங்களது ஆதரவினை நல்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

