கோட்டபூண்டிஅரசுபள்ளியில்அடிப்படைவசதி இல்லை?
![]()
விழுப்புரம் மாவட்டம்
மேல்மலையனூர் கோட்ட பூண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை அப்பகுதி மக்கள் போர்க்கொடி…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் கோட்ட பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 440 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி இருக்கும் இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் மஸ்தான் , சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர் மேல்மலையனூர் அவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெருத்தாம்பாள் ,எழிலரசன், செல்வராஜ், பெரியண்ணன், வேல்முருகன், தீபா ,கவிதா, பூங்காவனம், ஆகியோர்கள் பலமுறை மனு கொடுத்தும்அந்த இடத்திற்கு பட்டா வழங்காததால் அந்தப் பள்ளிக்குதேவையான அடிப்படை வசதிகள் ஆய்வகம், குடிநீர் பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக பட்டா வழங்கி போதிய அடிப்படை வசதிகள் செய்து தரஉடனடியாக தமிழக அரசு தலையிட்டு அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

