ஸ்ரீலட்சுமி நாராயணபெருமாள்ஸ்ரீபஞ்சமுகஆஞ்சநேயர்
![]()
திருப்பந்தியூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 73001 வட மாலை சாற்றி தீபாராதனை : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் :
திருவள்ளூர் டிச 21 : திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம், ஹோமம் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள இசையும் 73001 வட மாலை சாற்றி அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து லஷ்மி நாராயண பெருமாள் ஊஞ்சல் சேவை, பிரசன்ன வெங்கடேச பெருமாள் மூலவர் புஷ்ப அலங்காரம், திருப்பாவை சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மலர் மாலைகள், வண்ண ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பதால் திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா பாண்டிச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் திருப்பந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான மப்பேடு, சுங்குவார்சத்திரம், வயலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் சாமி தரிசனம் செய்தனர்.

