நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியில் நுகர்வோர் கூட்டம்

Loading

நீலகிரி
நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீ சரவணன் தலைமை தாங்கினார். இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமதுசலீம், கூடுதல் செயலாளர் பீட்டர், உதகை தொகுதி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான், இம்ரான், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீ சரவணன் பேசும்போது அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 22 துறைகள் மூலம், நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சைகள் நோயின் தன்மை மற்றும் அவசர தேவைக்கான சிகிச்சைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த மருந்துகள் வாங்க இயலாத நிலையில் வேறு மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சைகள் பெறுவது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிநோயாளிகள் காலை 9.30 மணிமுதல் 1.30 மணிவரை பார்க்கப்படுகிறது. உள்நோயாளிகளுக்கு காலை மாலை மருத்துவர் கண்காணிப்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகிறது.
சாதாரண நோய்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மக்கள் பயன்படுத்திக்கொண்டு, மேல்சிகிச்சைக்கு இங்கே வந்தால் மருத்துவ கல்லூரியின் கூடுதல் சிகிச்சைக்கு பயனளிக்கும். தினசரி 1000திற்கு மேற்பட்ட வெளிநோயாளிகள் 400கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தினசரி ஒரு கலர் என்கிற அடிப்படையில் பெட்ஷீட் தலையணைகள் மாற்றபடுகின்றன. ஒரு நோயாளி வெளியே செல்லும்போதும் பெட்ஷீட், தலையணைகள் மாற்றப்பட்டு புது நோயாளி அட்மிட் ஆகும்போது வேறு பெட்ஷீட் தலையணை வழங்கப்படும். தற்போது சுமார் ஆயிரம்  மாணவர்கள் இளநிலை மருத்துவம் பயின்று வருகின்றனர். அரசு விதிமுறைகள் படி தேவைக்கேற்ப பிரிவுகள் செயல்பட்டு வருவதால் பெரும்பான்மையான சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியன அரசு நிர்ணயித்த கட்டண அடிப்படையில் முன்னுரிமை மற்றும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காப்பீடு திட்டம் மூலம் கூடுதல் விலையுள்ள மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
சுகாதார பராமரிப்பில் தினசரி 3 முறை கழிவறைகள் சுத்தம் செய்யப்படுகின்றது. ஆனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக குறைவாக உள்ளதால், உணவுக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி வைப்பதும்,  மருத்துவமனையில் உள்ள கழிவறைகளில் மது பாட்டில்கள், நாப்கின் பேடுகள் போன்றவை போட்டு வைப்பதால், அடைப்புகள் ஏற்பட்டு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் அந்த குறைபாடும் நீங்கும்.
இடவசதி கிடைத்தால் தாய்சேய் மருத்துவ பிரிவு, குழந்தைகள் பிரிவும் புதிய மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு ஒரே வளாகத்தில் செயல்படுத்தப்படும். நோயாளிகள் மருத்துவ கல்லூரிக்கு வரும் முன்னர் காப்பீடு அட்டையும் எடுத்துவந்தால் கூடுதல் சிகிச்சைக்கு பயனளிக்கும் என்றார்.
0Shares