தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டம்

Loading

திருவள்ளூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் :
திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்டத்தில்,  ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,  பொன்னேரி,  பூந்தமல்லி  வட்டத்திற்குட்பட்ட பல்வேறு  கிராமங்களில் வாழும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள், சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுடுகாடு, மின்சாரம், குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை வகித்தார். துணைச் செயலாளர் டி.செஞ்சியம்மாள், மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்ட துணைச் செயலர்கள் எம்.சின்னதுரை, பி.அற்புதம், என்.வஜ்ஜிரவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, விதொச வட்டத் தலைவர் எஸ்.கலையரசன், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ராஜா, நரிக்குறவர் சாந்தி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில் வன உரிமை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்,  பழங்குடி பட்டியலில் மலக்குலையன், ஈரோடு மாவட்ட மலையாளி, வேட்டைக்காரன் ஆகியோரை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும், அதோடு திருவள்ளூர் மாவட்டத்தில் 98 கிராமங்களின்  வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு பேசும் போது தெரிவித்தார்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்பொழுது குடிமனை பட்டா இல்லாத 26 கிராமங்களும்,  மின்சாரம் வசதி இல்லாமல் 19 கிராமங்களும் சுடுகாடு இல்லாமல் 12 கிராமங்கள் உள்ளன. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.  எனவே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் என்றாலும்,  கடந்த ஆண்டு பழங்குடி மக்களுக்காக ஒதுக்கிய ரூ. 264 கோடியை நிதியை திருப்பி அனுப்பி உள்ளனர். ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 924 கோடியை  திருப்பி அனுப்பப்பட்டுள்ளது இவற்றை முழுமையாக செலவிட்டிருந்தால் இந்த மக்கள் பயன்பட்டு இருப்பார்கள். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் பேச்சு நடத்தினார். அப்போது, 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார். அதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
0Shares